ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமானார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) அதிகாலை சிங்கப்பூர் பயணமானார்.
தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி சில நாட்கள் அங்கு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது,
இதனால் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் பிரசன்னமின்றி நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரும், மருத்துவ சிகிச்சையின் பொருட்டு ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ சிங்கப்பூர் சென்று வந்துள்ளார்.