பிரபஞ்ச அழகியானார் ஹர்னாஸ் சந்து; இந்தியாவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றி

🕔 December 13, 2021

‘மிஸ் யுனிவர்ஸ்’ எனும் பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலின் எய்லட் நகரில் நடந்த இந்தப் போட்டியில் 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து – பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவருக்கு வயது 21.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்தான் ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றிருந்தார் ஹர்னாஸ் சந்து.

2020ஆம் ஆண்டுக்கான பட்டம் வென்றவரான மெக்சிகோவை சேர்ந்த மிஸ் யுனிவெர்ஸ் ஆண்ட்ரியா மேசா, ஹர்னாஸ் சந்துவுக்கு மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்துக்கான கிரீடத்தைச் சூட்டினார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் 2000ஆவது ஆண்டில் லாரா தத்தா வென்றார். அதற்கு முன் சுஸ்மிதா சென் இந்தப் பட்டத்தை 1994ல் வென்றிருந்தார். எனவே ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை வென்ற மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஹர்னாஸ் சந்து.

17 வயது முதலே மொடலிங் செய்து வரும் ஹர்னாஸ் சந்து, பஞ்சாபி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது குடும்பம் சண்டிகரில் வசிக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்