“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி

🕔 December 10, 2021

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்சிய இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி, தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது, ‘நான்தான் பிபின் ராவத்’ என தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ஹெலிகொப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே நேற்று முன்தினம் (08) விபத்துக்குள்ளானதை, அங்குள்ள குடியிருப்புவாசிகளும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களும் கண்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்று பார்த்தபோது, அருகில் நெருங்க முடியாதபடி தீ கொழுந்துவிட்டு எரிந்ததுள்ளது. இருப்பினும் வீட்டில் இருந்த வாளி, பாத்திரம், குடம் போன்றவற்றை பயன்படுத்தி தண்ணீரை எடுத்து ஊற்றி – தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் 02 பேர் படுகாயங்களுடன் முனகிக் கொண்டிருப்பதைப் பார்த்த தீயணைப்புத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து அவர்களை மீட்டு பெட்ஷீட்டில் சுற்றி தூக்கிச் சென்றனர். அப்போது முதலில் எடுத்துச்செல்லப்பட்ட நபர், ‘ஐ ஆம் பிபின் ராவத்’ எனக் கூறிவிட்டு, குடிக்கதண்ணீர் வேண்டும் எனக் கேட்டுஉள்ளார்.

தூக்கிச் சென்றவர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிபின் ராவத் உயிர் பிரிந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட மற்றொருவர் குரூப் கேப்டன் வருண் சிங் ஆவார்.

மீட்பு பணியில் ஈடுபட்ட நஞ்சப்பசத்திரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறும்போது; ‘‘படுகாயங்களுடன் ஒருவரை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து மீட்டோம். அவர் தன்பெயரை கூறி, குடிக்க தண்ணீர்கேட்டார். தீயில் அவர் படுகாயம்அடைந்ததால், தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து நான்உள்ளிட்ட சிலர், உங்களது உடல்நிலை நலமாக உள்ளது எனக் கூறி வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பகுதி வழியாக வாகனம் இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்தோம்’’ என்றார்.

இந்த விபத்தில் பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்