நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

🕔 December 9, 2021

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார்.

நாட்டை நேசிக்கும் ஊழலற்ற அரசியல்வாதிகள் மற்றும் ஏனையோரால் புதிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் எதிர்காலத்துக்காக இவ்வாறானதொரு சக்தி உருவாக வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 06 மாதங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறும் என நம்புவதாகவும் இதன்போது மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்