நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

🕔 December 9, 2021

– க. கிஷாந்தன் –

லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகி, 100 அடி பள்ளத்தில்   பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

மேற்படி காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளாகியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் கூறினர்.

Comments