ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம்

🕔 December 7, 2021

டமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானமையை அடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்து வெளியிடப்பட்ட பதாகையொன்றில் – கொல்லுரேயின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபையின் கீழ் வரும், வாரியபொல பிரதேச சபை வெளியிட்ட இரங்கல் பதாகையிலேயே, முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லின் படம் உள்ளது.

வடமேல் மாகாணம், மேல் மாகாணம் ஆகியவற்றின் ஆளுநராகவும் கொழும்பு மாநகரசபை மேயராகவும் முஸம்மில் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறிருந்தபோதும், தமது மாகாண ஆளுநரின் படத்துக்குப் பதிலாக வேறொருவரின் படத்தை அச்சிட்டு வெளியிட்ட, வாரியபொல பிரதேச சபையின் இந்த நடவடிக்கையினை சமூக ஊடகங்களில் பலரும் நையாண்டி செய்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

தொடர்பான செய்தி: வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்