நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே

🕔 November 9, 2021

நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது, தூஷணம் பேசிய ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கட்டுப்படுத்திய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது.

உர விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் அலுத்கமகே எதிர்க்கட்சியினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன்போது அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜாங்க அமைச்சர் ரத்வத்த, எதிர்க்கட்சியினரை நோக்கி சத்தமிட்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பார்த்து ‘பக்கயா’ (சிங்களத்தில் இது மிக மோசமானதொரு தூஷண வார்த்தை) என்று கூறினார்.

இதனையடுத்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரொஹான் ரத்வத்தயின் தலையில் தனது கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

ரொஹான் ரத்வத்த – ஒரு கட்டத்தில் எழுந்து நின்று எதிரணியினரை நோக்கி கத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராஜாங்க அமைச்சர் ரத்வத்தயைக் கட்டுப்படுத்த பல முயற்சிகளை மஹிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்டார்.

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த – தனது துப்பாக்கியைப் பயன்படுத்தி சிறையில் உள்ள கைதிகளை அச்சுறுத்தியதாக அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: கொழும்பு கசற் (Colombogazette)

Comments