தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி

🕔 October 27, 2021

டக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, திருமதி சார்ல்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகித்த ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வி .சிவஞானசோதியின் மறைவை அடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்காக, முன்னாள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் ராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இது தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்