‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு

🕔 October 27, 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என்று அந்த அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான அந்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´’ஒரே நாடு ஒரே சட்டம்´ எனும் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையினுள் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கபபட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதல் இந்த செயலணியின் பிரதான பணிகளாகும்.

இந்த செயலணியில் 09 பேர் சிங்களவர்கள், நால்வல் முஸ்லிம்கள் என்பதும், தமிழர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலணி அங்கத்தவர்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்