மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து

🕔 October 26, 2021

த்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரச முன்னுரிமையில் அவருக்கு ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், அவரின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, மத்திய வங்கியின் ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றார்.

இவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த போது, தனக்கு வழக்கப்படவுள்ள மத்திய வங்கி ஆளுநர் பதவியை – அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்துள்ள பதவியாக வழங்கும் படி, அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் 2021 செப்டம்பர் 15 அன்று கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்திலும் அஜித் நிவாட் கப்ரால் – மத்திய வங்கி ஆளுநராகப் பதவி வகித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்