“முடிந்தால் குறைத்துக் காட்டுங்கள்”: வடமேல் மாகாண ஆளுநருக்கு சவால்

🕔 October 20, 2021

முடிந்தால் அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து காட்டுமாறு குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் சரத் பிரேமசிறி சவால் விடுத்துள்ளார்.

21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாடசாலைக்கு வருகை தராத ஆசிரியர்களின் நொவம்பர் மாத சம்பளத்தை வழக்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாக வடமேல் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

ஆளுநரின் கருத்துக்கு பதிலளிக்கும் பொருட்டு, இன்று (20) பல்வேறு ஊடகவியலாளர் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்க தலைவர் சரத் பிரேமசிறி கருத்துத் தெரிவிக்கையிலேயே, முடிந்தால் அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பளத்தை குறைக்க விடப்போவதில்லை என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: நாளையும், மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரத்து

Comments