நாளையும், மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரத்து

🕔 October 20, 2021

டமேல் மாகாணத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் நொவம்பர் மாத கொடுப்பனவ வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.

எனவே மேற்படி நாட்களில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையினை தமக்கு வழங்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதியே தாம் பாடசாலைக்கு சமூகமளிக்கப் போவதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments