உலக பட்டினி பட்டியல்; 2021ஆம் ஆண்டில் இலங்கையின் நிலை என்ன: வெளியானது முழுமைத் தகவல்

🕔 October 16, 2021

லக நாடுகளில் எந்த அளவுக்கு ‘பட்டினி’ உள்ளது என்பதை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் பட்டியலில் 116 நாடுகளில் இலங்கை 65ஆவது இடத்தில் உள்ளது.

16.0 எனும் மதிப்பெண்ணை பெற்று இலங்கை இடந்த இடத்தை அடைந்துள்ளது.

இந்தப் பட்டியலில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை ‘குறைந்த’ பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 10 முதல் 20 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை ‘மிதமான’ பிரிவில் வைக்கப்படுகின்றன. 20 முதல் 35 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை ‘தீவிரமான’ பிரிவிலும் 35 முதல் 50 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றவை ‘ஆபத்தான’ என்ற பிரிவிலும் 50க்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவை ‘மிகவும் ஆபத்தான’ பிரிவிலும் வைக்கப்படுகின்றன. அதாவது அதிக மதிப்பெண் பெற்றால் மோசமான நிலை என்று பொருள்.

அண்டை நாடுகளான இந்தியா 101ஆவது இடத்திலும், நேபாளம் 76ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 76ஆவது இடத்திலும், மியான்மர் 71ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 92ஆவது இடத்திலும் இந்தப் பட்டியலிலும் உள்ளன.

இந்த நிலையில் இந்திய அரசாங்கம் 2021 உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கையை அதிர்ச்சியூட்டும் மற்றும் அறிவியலற்றதாக நிராகரித்துள்ளது. ஐரிஷ் உதவி நிறுவனமான கன்சர்ன் வேர்ல்ட்வைட் (Concern Worldwide) மற்றும் ஜெர்மனியின் வெல்டுங்கர்ஹில்ஃப் (Welthungerhilfe) ஆகியவற்றினால் கூட்டாக வெளியிடப்பட்ட இந்த பட்டியலில், இந்தியாவுக்கு மிகக் குறைந்த தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.

சீனா, பிரேசில் மற்றும் குவைத் உள்ளிட்ட 18 நாடுகள் ஐந்துக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்று இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்