பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும்: அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவிப்பு

🕔 October 17, 2021

பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் திறக்கப்படுவதற்கு எதிராக தாம் சார்பான அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர்கள் தொழிற் சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறினார்.

தமது சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாமல் பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டாலும், தமது வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அவர்களின் தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்திய நிலையில், சம்பள அதிகரிப்பை ஒரே தடவையில் நிறைவேற்ற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர் தொழிற் சங்கங்களின் ஒன்றியம் தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்