அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

🕔 October 11, 2021

ந்து வயதுடைய தனது மகளின் வாயில், எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையால் சூடுவைத்ததாகக் கூறப்படும் தாய் ஒருவரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தான் சமைத்துக் கொண்டிருந்த போது, தொல்லை கொடுத்த மகளுக்கே, இவ்வாறு சந்தேக நபரான தாய் சூடு வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 வயதான தாயாரை பொலிஸார் கைது செய்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவரை ஒக்டோபர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்