ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

🕔 October 4, 2021

ங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏரிஎம் இயந்திரங்களை சந்தேகநபர் உடைத்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய சந்தேக நபரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது – சந்தேக நபரிடம் இருந்து 29 லட்சம் ரூபா பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது 24 லட்சம் ரூபா பெறுமதியான லொறியொன்றும், 09 லட்சம் ரூபா பெறுமதியுடைய மோட்டார் சைக்கிள் மற்றும் 175,000 ரூபா பெறுமதியுடைய இலத்திரனியல் சாதனங்களையும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவை, திருடப்பட்ட பணத்திலிருந்து வாங்கியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Comments