மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, நீதிமன்றில் ‘ரிட்’ மனுத் தாக்கல்

🕔 September 28, 2021

டக்கு மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, அச் சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை இடைநிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையிலிருந்து தான் நீக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது எனவும் அவற்றுக்கெதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.

தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம். ஷஹீட், சந்தீப கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளுகையிலுள்ள, மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் பதவி நீக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்