அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளுகையிலுள்ள, மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் பதவி நீக்கம்

🕔 September 13, 2021

ன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச். முஜாஹிர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம், ஊழல் புரிந்துள்ளதாக தவிசாளர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆளுநரின் அதிகாரத்துக்கமைய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதி அலுவலர் கந்தையா அரியநாயகம் தலைமையிலான தனிநபர் விசாரணைக்குழு மேற்கொண்ட விசாரணை தொடர்பான அறிக்கை கடந்த 02 ஆம்திகதி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த அறிக்கையின் பிரகாரம், தவிசாளர் முஜாஹிருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபனமானதால், அவரை அந்தப் பதவியிலிருந்தும், சபை உறுப்புரிமையிலிருந்தும் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் நீக்கியுள்ளார்.

றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதிகாரத்தின் கீழ், மன்னார் பிரதேச சபை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்