காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி

🕔 September 24, 2021

கொரோனாவால் மரணித்தவர்களுக்கென, சுற்றுச் சூழலுக்குப் பதிப்பற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காட்போட்’ சவப்பெட்டிகளின் ஏற்றுமதியை இலங்கை இன்று (24) தொடங்கியது.

கடந்த மே மாதம் தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபை, இந்த கார்போட் சவப்பெட்டிகளை அறிமுகப்படுத்தியது.

இதற்கிணங்க, மொத்தம் 1200 காட்போட் சவப்பெட்டிகள், முதன்முறையாக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இலங்கைக்கான வியட்நாம் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், வியட்நாமிலுள்ள இலங்கை வம்சாவளி பௌத்த பிக்குகள் மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸை நகரசபை தலைவர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின் விளைவாக இந்த ஏற்றுமதி நடைபெற்றது.

தற்போது இலங்கையில் மேற்படி காட்போட் சவப்பெட்டிகள் நாடளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, காட்போட் சவப்பெட்டிகளை உருவாக்கி அவற்றை நகர சபையில் அறிமுகப்படுத்திய பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்