வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது

🕔 September 22, 2021

ல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக் குழு வேட்பாளர் ச. செல்வேந்திரா தெரிவு இன்று (22) செய்யப்பட்டார்.

வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது.

அதில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட சதீஷ் 07 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

அவருக்கு எதிராக போட்டியிட்ட சுயேட்சைக் குழு உறுப்பினர் செல்வேந்திரன் 08 வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவானார்.

வல்வெட்டித்துறை நகர சபையில் 17 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 07 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழுவில் 0 4 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிகள் சார்பில் தலா 03 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர் உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்