ஜனாதிபதி கோட்டா, ஐ.நா செயலாளர் சந்திப்பு

🕔 September 20, 2021

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, நாடுகளுக்கிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது முழு ஆதரவை வழங்கும் என – ஐநா பொதுச்செயலாளர், ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு வந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பை ஐநா பொதுச் செயலாளர் வழங்கியதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது.

1978 இல் அகில நாடாளுமன்ற சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கு வந்ததை நினைவு கூர்ந்த அவர் – கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலைக்குச் சென்ற அனுபவத்தை இதன்போது பகிர்நது கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்