ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை

🕔 September 13, 2021

க்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகள் தவறானவையாக இருக்கலாம் என, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு விவகார அமைச்சின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க நேற்று (12) ஆங்கில ஊடகமொன்று கூறுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பது குறித்து நீதியமைச்சு தங்களுக்கு அறிவிக்கவில்லை என்றார்.

“இது ஒரு வதந்தி மட்டுமேயாகும். ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் கைதியொருவர் விடுவிக்கப்பட வேண்டுமானால், அது குறித்து முதலில் சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி எங்களுக்கு எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சில தினங்களுக்கு முன்னர் – சமூக ஊடகங்களில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து பதிவொன்றை இட்டிருந்தார். ’12ஆம் திகதி தேசிய கைதிகள் தினம் என்பதால், ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் – ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறேன்’ என சஜித் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

தொடர்பான செய்தி: ரஞ்சன் 12ஆம் திகதி விடுதலை?: சிறைக்கைதிகள் தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கிறதா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்