ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை

🕔 May 19, 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில், கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான ஆசாத் சாலி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments