நாட்டுக்குள் வர முடியாது, ஆனால் வெளியேறலாம்: 10 நாட்களுக்கு விமான போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள தீர்மானம்

🕔 May 19, 2021

லங்கையில் அனைத்து பயணிகள் வருகையும் 21 முதல் மே 31ஆம் திகதி வரை தடை செய்யப்படவுள்ளன.

இம்மாதம் 21 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் மே 31ஆம் திகதி இரவு 11.59 வரை, விமான வருகை நிறுத்தப்படும் என, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த காலகட்டத்தில் பயணிகள் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Comments