மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி

🕔 May 17, 2021

ற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பது பாவச் செயல் எனக்கூறிய பௌத்த தேரர் ஒருவரை, ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளான பௌத்த பிக்கு, மாத்தறை வைத்தியசாலையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என, வெலிகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகமை – கொவியாபான, கப்புவத்தை ஸ்ரீ விவேகாராம விகாரையின் விகாராதிபதியான 80 வயதான தித்தகல்லே தேவானந்த தேரரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 05 இளைஞர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

விகாரைக்கு பின்னால் ஓடும் ஆற்றில் வாழும் மீன்களுக்கு தினமும் சோறு போடுவதை மேற்படி தேரர் நீண்டகாலமாக செய்து வந்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி ஆற்றுக்கு அருகில் இருந்த இளைஞர் ஒருவர் மீன்பிடித்தமையைக் கண்ட தேரர், அது பாவச் செயல் என கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் மேலும் 5 பேருடன் சென்று தேரரை பொல்லுகளால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்