எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர், பணியிலிருந்து இடைநிறுத்தம்

🕔 March 29, 2021

டுவீதியில் வைத்து வாகனச் சாரதியொருவரை மோசமாகத் தாக்கிய பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான நபர் வீதியில் விழுந்த போதும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரின் மேல் ஏறி குதிப்பதை வீடியோவில் காணமுடிகின்றது.

இதன்போது தாக்குதலுக்குள்ளான வாகனச்சாரதியை குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தூஷண வார்த்தைகளால் ஏசுவதையும் கேட்க முடிகிறது.

சமூக ஊடகங்களில் காணப்பட்ட இந்த வீடியோவை பார்த்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மஹரகம பொலிஸ் பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். பன்னிபிட்டியவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லொறியொன்று போக்குவரத்து பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒருவரை விபத்துக்குள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னரே மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர், லொறிச்சாரதியை தாக்கியுள்ளார்.

வாகனச்சாரதி விபத்தை ஏற்படுத்தினால் கூட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வார் என தன்னால் நம்பமுடியவில்லை என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரை லொறி மோதும் காட்சி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்