கழிவுத் தேயிலை களஞ்சியசாலை; எஸ்.ரி.எப் சுற்றி வளைப்பு: தூய தேசியலைத்தூள் என சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்

🕔 March 22, 2021

– க. கிஷாந்தன்

பூண்டுலோயா – கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 04 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுத் தேயிலை – குறித்த நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் பூண்டுலோயா பொலிஸாரிடம், விசேட அதிரடிப்படையினர் கையளித்தனர்.

Comments