இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளரை தொடர்பு கொண்ட கோட்டா: இலங்கை முஸ்லிம்களின் நிலைமை தொடர்பில் பேச்சு

🕔 March 22, 2021

ஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் யூசெப் அல் ஒதய்மின் ஐ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டு பேசியதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்தும், இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலைமை தொடர்பிலும் பேசியுள்ளனர்.

இஸ்லாமிய சடங்குகளின்படி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் முடிவை இதன்போது வரவேற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர், சர்வதேச அமைப்புகளை அணுகுவதற்கான இலங்கை ஜனாதிபதியின் விருப்பத்தையும் பாராட்டினார்.

முஸ்லிம் சமூகங்கங்கள் அவர்களின் நிலைப்பாடுகளைப் பின்பற்றுவதற்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கொண்டுள்ள ஆர்வத்தை, இதன்போது செயலாளர் ஒதய்மின் மீளவும் வலியுறுத்தினார்.

Comments