நிந்தவூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட இடம் சுற்றி வளைப்பு

🕔 March 16, 2021
%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+5000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

– பாறுக் ஷிஹான் –

போலி நாணயத்தாள் அச்சிட்ட இடமொன்று நிந்தவூர் பிரதேசத்தில் சுற்றி வளைக்கப்பட்டதோடு, அதனுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை ராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய,  அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து, இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய  வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உட்பட,  5000 ரூபா போலி நாணயம் அச்சிடும் தாள்கள் மற்றும் அச்சிடப்பட்ட பணம்  என்பன மீட்கப்பட்டன.

கைதான சந்தேக நபர்கள் ஒலுவில் பாலமுனை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த 06 மாதங்களுக்கு முன்னரும்   கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்