ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 March 8, 2021

ஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 07ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஆயினும் அந்தத் தொகை தற்போது 300 ஆக குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

32 பேருக்கு எதிராக ஆட்கொலை மற்றும் சதித் திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்யுமாறு 08 கோவைகளை அனுப்பியுள்ளோம்.

241 பேர் விளக்கமறியலில் உள்ளனர். அவர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் மறைமுகமாக தொடர்புபட்டவர்கள்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை சட்டமா அதிபர் காத்திருந்தார். தற்போது கிடைத்துள்ளது. சட்டமா அதிபர் 12 பேர் கொண்ட விசேட குழுவை நியமித்துள்ளார். அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்