கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

🕔 March 4, 2021

கொவிட் தாக்கம் ஏற்பட்ட நிலையல் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொவிட் மரணங்கள் தொடர்பில் இறந்தவர்களின்உறவினர்கள், காலம் தாமதிக்காது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதனை எழுத்து மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் எழுத்து ஆவணங்கள், கொவிட்19 தொற்றால் மரணிக்கும் சரீரங்களை இரணைதீவு நோக்கி கொண்டு செல்லும் வரை செல்லுபடியாகும்.

சரீரங்களை கொண்டு செல்வதற்கான சவப்பெட்டியை உறவினர்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சரீரங்களை எடுத்து செல்லும் போது படம் பிடிக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் பெயரிடப்பட்டுள்ள இடத்துக்கு கொவிட்19 தொற்றால் மரணிப்பவர்களின் சரீரங்கள் கொண்டு செல்லப்பட்டு நாளாந்தம் அதிகாலை 5.30 மணிக்கு நாச்சிகுடா இறங்குதுறை வரை சரீரங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.

கொவிட்19 தொற்றால் மரணிப்பவர்களின் சரீரத்தை அடையாளங்காண்பதற்காக வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் உறவினர்களில் இரண்டு பேருக்கு மாத்திரமே இரணைதீவுற்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.

குறித்த உறவினர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்.

அத்துடன் சுகாதார பணிக்குழாமினருடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

எந்தவொரு காரணத்துக்காகவும் சரீரம் அடங்கிய சவப்பெட்டியை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இறுதி சடங்குகளை 02 உறவினர்களால் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்