காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

🕔 January 22, 2021

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது.

அந்த நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்காகவே காதிமார்கள் இணைக்கப்படுகின்றனர்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கும் நீதியமைச்சிற்கும் எந்த தொடர்பும் இல்லை” என அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Comments

புதிது பேஸ்புக் பக்கம்