பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு, 06 ஆண்டுகள் கடூழிய சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

🕔 January 21, 2021

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 06 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 06 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர, அட்டுலுகம பகுதிக்குச் சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா அபாரமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்