மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் தொடர்பில் ஆராய, புதிய குழு நியமனம்

🕔 January 22, 2021

னித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க இதுவரை நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனவா என்பது குறித்து விசாரிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ – மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ் தலைமையிலான குறித்த விசாரணைக் குழு இம்மாதம் 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் நியமிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் முக்கிய பணி, மனித உரிமை மீறல்கள் முறையாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதாகும்.

அத்துடன், இது தொடர்பான இறுதி அறிக்கையை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தர வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்