ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கிறார்

🕔 January 12, 2021
நீதிமன்றுக்கு செல்வதற்கு முன்னர் பேஸ்புக்கில் ரஞ்சன் வெளிட்ட படம்

திர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையினால், ரஞ்சன் ராமநாயக்க, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களிடம் பேசும் போது நீதித்துறையை அவமதித்துப் பேசியதாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாட்டில் பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என 2017ஆம் ஆண்டு ரஞ்சன் கூறியிருந்தார்.

இதனையடுத்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக மகல்கந்தே சுநந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தர் சுனில் பெரேரா ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தி, நீதித்துறையை அவமதித்ததாக புகார் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்