சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம்

🕔 January 12, 2021

ட்டத்தரணிகள் 150 பேரை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் நிலையங்களில் நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், ஒன்பது மாகாணங்களிலுமுன்ன பொலிஸ் நிலையங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு நியமிக்கப்படும் சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்களில் பயிற்சி வழங்கப்படும்.

Comments