மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை

🕔 January 6, 2021

நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தடுப்பூசியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை வழங்க வேண்டிய விதம் திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முதலில் களத்தில் இறங்கி வேலைசெய்யும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து முப்படையினக்கும் பொலிசாருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

இது தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என ஜனாதிபதி ஆலோசகர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்