எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

🕔 December 31, 2020

மூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பணப் பரிசு பெற்றுள்ளதாக பொதுமக்களுக்கு வரும் தகவலில் ஏமாந்து விட வேண்டாம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறான தகவலை நம்பி, தகவல் வழங்குவோர் கேட்பதற்கிணங்க பணத்தை அனுப்பி ஏமாந்து விட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு போலி தகவல்கள் வாயிலாக மக்களை ஏமாற்றிய நைஜீரிய நாட்டை சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் சில நைஜீரியர்களால் இந்த சட்டவிரோத செயல்கள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படலாம் எனவும் பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு குறித்த நைஜீரிய பிரஜைகள் மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிக்கு அல்லது வட்ஸாப் உள்ளிட்ட இணையத்தள செயலிகளுக்கு பணப்பரிசினை வென்றுள்ளதாக குறுஞ்செய்திகளை அனுப்பப்படுகின்றன.

இதனையடுத்து குறித்த பணப்பரிசினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனை நம்பி மக்களும் பணத்தை வைப்பிலிடுகின்றனர்.

வைப்பிலிட்ட பணத்தை பெற்றுக்கொண்டவுடன் அவர்கள் தலைமறைவாகி விடுகின்றனர்.

இவ்வாறே மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், இது போன்று மேலும் பல திட்டங்களையும் நைஜீரிய பிரஜைகள் வகுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்