கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி

🕔 December 13, 2020

‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பொன்று கல்முனை நகரில் இயங்குவதாக திவயின சிங்களப் பத்திரிகை இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்தச் செய்தியில்;

‘சுப்பர் முஸ்லிம்’ என்ற ஒரு தீவிரவாத அமைப்பு இலங்கையின் கல்முனை நகரில் இயங்குகின்றது. அதன் தலைவர் டொக்டர் கலந்தர் லெப்பை முஹம்மத். இவர் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கலகத்தில் படித்தவர்.

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது, அரசசார்பற்ற அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பணம் வசூலித்து அப்பணத்தின் மூலமே இவ்வமைப்பை ஆரம்பித்தார்.

அந்தக் காலப்பகுதி தொடக்கம் இவர் தனது கொள்கையைப் பரப்பிவருகின்றார். 2019இல் இவரின் பிரசாரம் இன்னும் தீவிரமடைந்துள்ளதுடன் இவருடன் தற்போது 300 பேர் வரை உள்ளனர். இன்னும் 1000க்கு மேற்பட்டோர் இவர்களுடன் கைகோர்த்துள்ளதாக ராணுவப் புலனாய்வுத் துறை கூறியுள்ளது.

இப்போது கல்முனையில் வீடுகளைப் பயன்படுத்தி ஆண் – பெண் இரு சாராருக்கும் தீவிரவாத பிரச்சாரங்களை கலந்தர் லெப்பை போதித்து வருகிறார்.

இவர்களின் நோக்கம் ஷரீஆ சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்துவதாகும்.

இவ்வமைப்பைச் சேர்ந்த ஆண்களுக்கு தங்களின் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது என்றும் நோய்வாய்ப்பட்டால் மருத்துவம் செய்யக் கூடாது என்றும் தலைவரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்