உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா

🕔 December 4, 2020

லகளவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுவரையில் 06 கோடியே 56 லட்சத்து 298 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் 04 கோடி 54 லட்சத்து 31 ஆயிரத்து 944 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவினால் 15 லட்சத்து 14,827 பேர் இறந்துள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் 02 லட்சத்து 82,829 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனாவினால் அதிகமானோர் மரணித்த நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

கொரோனா மரணப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 175,307 பேர் பலியாகியுள்ளனர்.

மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அங்கு 139,227 பேர் இறந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 129 பேர் மரணித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்