மாத்தளை மாநகர சபை மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹாரே நீக்கம்

🕔 December 3, 2020

மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மாகாண ஆளுநனரால் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார்.

டில்ஜித் அலுவிஹாரேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவால் கடந்த 24 ஆம் திகதி மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமவேவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

மேயருக்கு எதிராக மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தமையை அடுத்து, மேயரை அவரின் பதவியிலிருந்து 03 மாதங்களுக்கு ஆளுநர் இடைநிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையிலேயே, தற்போது அவர் ஒட்டுமொத்தமாக அவரின் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேயர் டல்ஜித் அலுவிஹாரே – ஐக்கிய தேசியக் கட்சி சார்பா, மாத்தளை மாநகர சபைக்கு தெரிவாகியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்