றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

🕔 November 25, 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக் கோரிக்கைகள் பல தடவை நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை

Comments