தலைப்புச் செய்திகள்

நாட்டில் கொரோனா மரணம் 58ஆக உயர்வு

கொரோனா தொற்றினால் மேலும் 05 பேர் மரணித்துள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க 58 பேர் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மேற்படி ஐவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி வரையிலான காலப் பகுதியில் இதுவரை 17,127 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 11,495 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.