சட்ட விரோத காடழிப்பில் றிசாட் ஈடுபட்தாக நீதிமன்றம் அறிவிப்பு; அவரின் செலவில் மரங்களை நடுமாறும் உத்தரவு

🕔 November 16, 2020

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வில்பத்து பகுதியின் கல்லாறு பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக, அவர் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்றிசாட் தனது சொந்த நிதியில் குறித்த பிரதேசத்தில் மரங்களை நட வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான செலவுகளை றிசாட் பதியுதீன் செலுத்த வேண்டும் என்று ம், மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் காட்டினை அழித்து மக்களை குடியமர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான நிலையம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்