முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர்

🕔 November 9, 2020

முகக்கவசமின்றி வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ் வவுனியாவில் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்ட கூட்டத்தில் கலந்து கொண்டமை குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஆளுநரின் இந்த அலட்சிய நடவடிக்கையை அந் நிகழ்வில் கலந்து கொண்ட ராஜங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியதையடுத்து முகக்கவசத்தை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் பெற்று ஆளுநர் அணிந்து கொண்டதாக தெரியவருகிறது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இக்கூட்டத்தில் வரவேற்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசம் அணியாது கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது குறித்த வரவேற்பில் கலந்து கொண்ட ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, முகக்கவசம் அணியவில்லை என்பதை வடமாகாண ஆளுநருக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக அவரின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தரை வரவழைத்து முகக்கவசம் எடுத்து வருமாறு பணித்து அதன் பின்னர் முகக்கவசத்தினை அணிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் கொரோனா பாதுகாப்பு முகக்கவசத்தினை அணியாது நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை அங்கிருந்தவர்களுக்கிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

Comments