கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர்

🕔 October 31, 2020

கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை பலியாகியுள்ளார். இதன் காரணமாக நாட்டில் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று காலை நிலைவரப்படி நாட்டில் இதுவரை 10 ஆயிரத்து 424 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மட்டும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 633 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்