துருக்கி, கிறீஸ் நாடுகளில் பாரிய நிலநடுக்கம்; 04 பேர் பலி, 120 பேர் காயம்
பாரிய நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் கிறீஸ் ஆகிய நாடுகளில் 04 பேர் பலியாகியுள்ளதுடன், 120 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
துருக்கியின் கடலோர நகரமான இஸ்மிரில் குறைந்தது 120 பேர் காயமடைந்ததாக துருக்கியின் சுகாதார மந்திரி பஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார்.
7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் துருக்கி இஸ்மிர் நகரில் மக்கள் தெருக்களில் திரண்டனர்.
20 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக இஸ்மிர் மேயர் தெரிவித்துள்ளார். சுமார் 4, 5 மில்லியன் குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்த நகரம், துருக்கியில் மூன்றாவது பெரிய இடமாகும்.
இந்த அனர்த்தத்தால் இஸ்மிர் நகரிலுள்ள 06 கட்டிடங்கள் அழிந்துள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.