‘கொச்சை’ தமிழ் பேசுவோருக்கு வசந்தம் செய்திப் பிரிவில் தொடர்ந்தும் முன்னுரிமை: காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும்

🕔 September 26, 2020

– அஹமட் –

சந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் தமிழை சரியாக உச்சரிக்க முடியாதவர்களுக்கே தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பதை, நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த போதும், அதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப்பார்வை’ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றவர்களில் அதிகமானோருக்கு – தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்பதை – இதற்கு முன்னரும் செய்தியாக வழங்கியிருந்தோம்.

ஆயினும் வசந்தம் செய்திப் பிரிவின் நிர்வாகம் – அதனைத் திருத்துவதற்குரிய நடவடிக்கைகள் எவற்றினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

அரச தொலைக்காட்சியொன்றில் இவ்வாறு தமிழைக் கடித்துக் குதறுகின்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை அவமானகரமானதாகும்.

மட்டுமன்றி, இந்த அரசாங்கம் தமிழுக்கு வழங்கும் இடம் இதுதானா என்கிற விமர்சமும் எழுந்து வருகின்றது.

தமிழை மொழியை சரியாகவும், அழகாகவும் உச்சரிக்கத் தெரியாதவர்களுக்கு, தமிழ் மொழிக்குரிய தொலைக்காட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றால், அதற்குரிய பின்னணி என்ன என்பது குறித்து ஆராயப்படுதல் வேண்டும்.

தகைமையும், திறமையும் இல்லாதவர்களுக்கு, இவ்வாறு பின்வழியாக சந்தர்ப்பம் வழங்கப்படும் போது, ஒட்டுமொத்தத்தில் வசந்தம் தொலைக்காட்சிக்கே அபகீர்த்தி ஏற்படும் நிலை உருவாகும் என்பதையும் பொறுப்பானவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழை அழகாக உச்சரிக்கக் கூடிய எத்தனையோ திறைமையானவர்கள் இருக்கத்தக்கதாக, கொச்சைத் தமிழ் பேசும் பேர்வழிகளுக்கு வசந்தம் செய்திப் பிரிவில் முன்னுரிமை வழங்கப்படுவது ஏன் என்பதை ஊடக அமைச்சரே சற்று தேடிப்பாருங்கள்.

ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அரச தொலைக்காட்சியில் நிகழும் தமிழ்க் கொலைக்கு எப்போது முடிவு வரும்?

வசந்தம் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப் பார்வை’ எனும் நிகழ்சியை பிரியா எனும் பெண், கொஞ்சைத் தமிழால் தொகுத்து வழங்குவதை இங்கு காணலாம்.

தொடர்பான செய்தி: தமிழைக் குதறும் வசந்தம் செய்தி: தமிழ் பிரிவுக்கு சிங்களவர் நியமனம்: அமைச்சரே கொஞ்சம் கவனியுங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்