மாகாண சபை முறைமை தேவையில்லை: பிரதேச சபையில் தீர்மானம்

🕔 September 16, 2020

மாகாண சபைகளை ரத்து செய்யும் பிரேரணை ஒன்று வலல்லாவிட்ட பிரதேச சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலல்லாவிட்ட பிரதேச சபை தவிசாளர் உதேனி அத்துக்கோரள தலைமையில் நேற்று சபை அமர்வு இடம்பெற்றது.

மகாண சபை முறையை நீக்கி, அந்த அதிகாரத்தை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் பிரேரணையை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நாலக சமரவீர முன்வைத்தார்.

அதன் பின்பு பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, சபைக்கு சமூகமளித்திருந்த 23 பேரில் 21 பேர் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஒருவர் சபையில் இருக்கவில்லை என்பதுடன் மற்றொருவர் வாக்களிக்கவில்லை.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும், மாகாண சபை முறைமை தேவையில்லை எனக் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments