ஊவா ஆளுநர் முஸம்மில், கடமைகளைப் பொறுப்பேற்றார்

🕔 September 7, 2020

க. கிஷாந்தன்

வா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஷாமில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக, இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வட மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர், ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

சிறிது காலம் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த இவர், கொழும்பு மாநகர சபையின் மேயராகவும், மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் சேவையாற்றிருந்தார்.

ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, சாமர சம்பத் தஸநாயக்க, டிலான் பெரேரா, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்